பல்லவியும் சரணமும் - பதிவு 20
இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 2 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. சோக்காய் வாங்கி தின்னுபுட்டு உட்டானய்யா கொட்டாயி...
2. செப்புச்சிலை போல உருண்டு திரண்டிருப்பாளாம்...
3. உள்ளிருக்கும் நினைவில் உறவாடு..
4. அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி ...
5. என்ன சொல்லவோ மயக்கமல்லவோ, கன்னி அல்லவோ ...
6. உன்னாலே பசி தூக்கம் இல்லை, எப்போதும் ...
7. நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை நான் பதிக்க...
8. கல்யாணமே வைபோகம் தான் பூந்தேரிலே ஊர்கோலம் தான்...
9. உன் சேலையில் பூவேலைகள், உன் மேனியில் ...
10. நாயகன் ஜாடை நூதனமே, நாணமே ...
11. பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள்...
12. நான் இருந்தேன் வெறும் மெய்யெழுத்தாய் ...(EASY!)
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
7 மறுமொழிகள்:
4. படைத்தானே பிரம்ம தேவன் - முத்துராமன், மஞ்சுளா நடித்த படம்
7. சங்கத் தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும்
9. தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு
3. ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்.
5. புதிய பூவிது பூத்தது.
12. காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்.
2. திருமணமாம் திருமணமாம்.. தெருவெங்கும் ஊர்வலமாம்..
10. பூபாளம் இசைக்கும்..
சிறிது நேரத்தில் மீண்டும் வருகிறேன்
டெஸ்ட்
11. உன்னிடம் மயங்குகிறேன்.
பாலாஜி, மன்னிக்கவும். காலையில் வந்த போது எனக்கு தெரிந்த பல்லவிகளை வசந்தனும், இகாரஸும் முந்திகொண்டு சொல்லியதால் மீதமுள்ளதில் எனக்கு தெரிந்த இரண்டை எழுதினேன். பிறகு வெளியே போய்விட்டு இப்போதுதான் திரும்பினோம். 1 குறித்து எந்த ஐடியாவும் இல்லை. 6, 8 , 11 மிகவும் பரிச்சயாமாய் இருந்ததால் வந்து சொல்லிவிட முடியும் என்று காலையில் தோன்றியது. ஆனால் இப்போது 11 தவிர மற்றவை ஞாபகம் வர மறுக்கிறது. நானும் 15 நிமிடமாய் முயற்சித்துவிட்டேன். ஆகையால்.. ஸாரி, அவ்வளவுதான்!
தெரியாதுன்னு சொல்ல இவ்வளவு பில்டப்பா மவனேன்னு கேக்க தோணுதா? அதுவும் சரிதான்!
நன்றி ரோசா!
விடைகளை சொல்லி விடுகிறேன், பில்டப் இல்லாமலேயே :-)
1. மாப்பிள்ளை வந்தான், மாப்பிள்ளை வந்தான், மாட்டு வண்டியிலே, பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!
6. பேசக்கூடாது, வெறும் பேச்சில் சுகம், ஏதுமில்லை ... லீலைகள் காண்போமே!
8. தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது தம்பி, உன்னை நம்பி, இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது ...
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி பாலாஜி! இப்போது எல்லாம் ஞாபகம் வரும்தானே!
Post a Comment